Powered By Blogger

புதன், 15 பிப்ரவரி, 2012

மத்திய அரசுக்கு கூடங்குளம் மக்கள் சார்பாக சில கோரிக்கைகள் !

1.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் அணு உலை அருகில் ஒரு பிளாட் கட்டி அவர்கள் அங்கு குடியேற வேண்டும் .
2 .மத்திய அரசு அமைத்த 15 பேர் கொண்ட நிபுனர் குழுவின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் மற்றும் இடிந்தகரை பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
3 .மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் அணு உலை அருகில் ஒரு பிளாட் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
4 .கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் G.k.வாசன் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு கூடங்குளம் பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
5 .மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இடிந்தகரை பகுதிகளில் வீடுகள் கட்டி அங்கு அவர்கள் குடியேற வேண்டும் .
(ஏன் என்றால் அவர்கள் தான் கூடங்குளம் அணு உலை மிக மிக பாதுகாப்பானது என்று கூறியவர்கள்
மேற்கண்ட அணைத்து உதவிகளும் இன்னும் சுமார் நான்கு (4 ) மாதத்தில் உடனடியாக செயல் படுத்த வேண்டும் .
(அல்லது)

6 .முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
7.மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களின் சொந்த ஊரான பாண்டிச்சேரியில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
8 .மத்திய நிதி அமைச்சர் ப .சிதம்பரம் அவர்களின் சொந்த ஊரில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
9.கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் G.k.வாசன் அவர்களின் சொந்த ஊரில் சுமார் 1000 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அணு உலை ஒன்றும் ,
10.மற்றும் ஏனைய காங்கிரஸ் ,பாரதீய ஜனதா தலைவர்களின் சொந்த ஊரில் அணு உலை அமைக்க அவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
மேற்கண்ட அணைத்து அணு உலைகளை நிறுவதற்கு ரஷ்யா யுடன் உடனடியாக ஓப்பந்தம் செய்து அதற்குரிய வேலைகளை தொடங்க வேண்டும் .
இவை அனைத்தும் இன்னும் நான்கு (4 )மாதத்திற்குள் செயல் பட வேண்டும் .அப்படி செயல் படுத்த பட்டால் நான்கு மாதத்திற்கு பிறகு கூடங்குளம் அணு உலை வேலை நடப்பதற்கும் அணு உலை செயல் பட கூடங்குளம் மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் .